ராதாபுரம் தொகுதியில் தடுப்பூசி முகாம் : சட்டப் பேரவை தலைவர் தொடங்கி வைத்தார்

ராதாபுரம் தொகுதி வடக்கன்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.
ராதாபுரம் தொகுதி வடக்கன்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாமை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் வடக்கன்குளம் ஆர்.சி. சர்ச் வளாகம், காவல்கிணறு ஆர்.சி. சர்ச் வளாகம், பணகுடி அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம், வள்ளியூர் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் கார், வேன், சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம், வடக்கன்குளம் வட்டார பங்குத்தந்தை ஜாண்பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை மார்டின், வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ், ஒன்றிய திமுக செயலர்கள் ஜோசப் பெல்சி, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் புஷ்பலதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சட்டப் பேரவை உறுப்பினர் மு. அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in