தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு - அமைச்சரிடம் ரூ.3 லட்சம் வழங்கிய பட்டாசு வணிகர்கள் :

விருதுநகரில்  முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3 லட்சத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கும் பட்டாசு வணிகர்கள்.
விருதுநகரில் முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3 லட்சத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கும் பட்டாசு வணிகர்கள்.
Updated on
1 min read

கரோனா நிவாரணப் பணிக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு பட்டாசு வணிகர்கள் சார்பில் ரூ.4,71,500 வருவாய்த்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு அமைப் பினர் மற்றும் தனி நபர்கள் முதல் வர் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநிலத் தலைவர் ராஜு சந்திரசேகரன், ரூ.3 லட் சத்துக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக விருதுநகரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கினார். மேலும், விருதுநகர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது. அதோடு, அப்ப யநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், தற்போது காவலராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவர், தனது ஒருமாத ராணுவ ஓய்வூதியத் தொகை ரூ.21,500-ஐ முதல்வர் நிவாரண நிதிக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கி னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in