அதிக விலைக்கு காய்கறி விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் :

அதிக விலைக்கு காய்கறி விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் :
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தோட்டக்கலைத்துறை சார்பில் வாகனங்கள் மூல மாக காய்கறிகள் மற்றும் பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை நடக்கிறது. இத்தகைய வாகனங்களில் உரிய விலைப்பட்டியல் இல்லா விட்டால், அல்லது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காய்கறிகள் விநியோகம் குறித்து, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04633 290 548 மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04633 210768 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in