பாதுகாப்பு உபகரணம் வழங்கல் :

பாதுகாப்பு உபகரணம் வழங்கல் :
Updated on
1 min read

காவலர்கள் துறைரீதியான பணிக்காக கடையநல்லூர், செங்கோட்டை மற்றும் சங்கரன் கோவில் ஆகிய அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். தென்காசி, மாவட்டத்தில் காவல்துறையினர் 60 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது 30 போலீஸார் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கு சென்று வரும்போது கரோனா தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்க மாவட்ட எஸ்பி சுகுணாசிங் ஏற்பாடு செய்தார். அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு பணி நிமித்தமாக சென்று வரக்கூடிய காவலர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in