

திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளியில் உள்ள ரேஷன் கடை அரசின் உத்தரவையடுத்து திறக்கப்பட்டு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதன்படி நாள்தோறும் 100 அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை டோக்கன் வாங்கியவர்கள் காலை 7 மணியளவில் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு சென்றனர். எனினும், காலை 8.40 மணியாகியும் கடை திறக்கப்படவில்லை. இதனால் வரிசையில் காத்திருந்த மக்கள் கூச்சல் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். பணியாளர் வந்ததும் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், மறுநாள் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு டோக்கனும் விநியோகிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.