

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நாளை(மே 29) குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகள், தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி, ஆளவந்தான் படித் துறை நீர் சேகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு மின்சாரம் வழங்கும் ரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று மின் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், மாநகரின் சில பகுதிகளில் நாளை (மே 29) குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரங்கம் கோட்டத்தில், ரங்கம், சஞ்சீவி நகர், தேவதானம் ஆகிய பகுதிகளிலும், அரியமங்கலம் கோட்டத்தில் விறகுபேட்டை, மகாலட்சுமி நகர், மலைக்கோயில், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.
இதேபோல, பொன்மலைக் கோட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜெகே நகர், மேல கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறை, சுப்பிரமணியபுரம், விமானநிலையப் பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கேகேநகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணி முத்து நகர், அய்யப்ப நகர் ஆகிய பகுதிகளிலும், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில், உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர், எ.புதூர், கே.சாத்தனூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.