

ஆரணி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகப்படுத்தி தரவேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், “தி.மலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதியை அதிகப்படுத்தி தர வேண்டும். இதேபோல், தச்சூர் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய தலா 30 படுக்கை களாக மாற்றித் தர வேண்டும்.
மேலும், அதே கிராமங்களில் செயல்படும் தற்காலிக சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.