ரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் -  பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு :

ரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் - பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு :

Published on

ரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு உண வுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை நேற்று வழங்கினார்.

ரங்கம் எம்எல்ஏ எம்.பழனி யாண்டி, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அர்ச் சகர் சுந்தர் பட்டர் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in