சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட  -  வாழைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை  :  அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட - வாழைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

Published on

சூறைக் காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், ஆலங்குடி அருகே வடகாடு, கொத்தமங்கலம், கீழாத்தூர் போன்ற பகுதிகளில் வாழை மரங்கள் அதிக அளவில் முறிந்து சாய்ந்தன. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. வடகாடு பகுதியில் வாழை பாதிப்புகளை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியது:

ஏற்கெனவே, கரோனா தொற்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில், சூறைக்காற்று ஏற்படுத்திய பாதிப்பால் விவசாயிகள் மேலும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிப்புகள் குறித்து ஓரிரு நாட்களுக்குள் அலுவலர்கள் கணக் கெடுப்பு பணியை முடித்து, அறிக்கை தரவேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் டெய்சிகுமார், வட்டாட்சியர் பொன்மலர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வினோதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in