விழுப்புரம் மாவட்டத்தில் - 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

விழுப்புரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருகில் ஆட்சியர் அண்ணாதுரை.
விழுப்புரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருகில் ஆட்சியர் அண்ணாதுரை.
Updated on
1 min read

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 22,400 கோவிஷீல்டும், 4,000 கோவாக்ஸின் தடுப்பூசியும் இருப்பில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகள் மாவட்டத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது என்றார்.

அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செஞ்சி அருகே சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in