

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 900-க்கும் மேற்பட்டோரு க்கு கரோனா பாதிப்பு ஏற் பட்டது. மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இதை தொடர்ந்து எஸ்.பி. முகாம் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவகத்தில் பணியில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. கரோனாவால் பாதி க்கப்பட்ட 17 பேர் நேற்று மரண மடைந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் 490 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. 713 பேர் குணமடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று 386 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப் பட்டது. 4.023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி
ஒரே நாளில் 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். மாவட்டத்தில் தற்போது 7,966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது.