

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் (23-ம் தேதி) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு விமானம் புறப்பட்டு சேலத்துக்கு 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது. மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்ட விமானம் 9.35 மணிக்கு சென்னையை அடைந்தது.
சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 10 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். அதேபோல, சேலத்தில் இருந்து சென்னைக்கு 16 பயணிகள் மட்டுமே சென்றனர். நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு 6 பேரும், சேலத்தில் இருந்து சென்னைக்கு 6 பேரும் பயணித்துள்ளனர்.