

ஈரோடு நகரில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘ஒளிரும் ஈரோடு’ பொதுநல அமைப்பு மற்றும் கிறிஸ்து ஜோதி மருத்துவமனை இணைந்து ஈரோடு மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.