உதவி தேவைப்படும் முதியோர் காவல் துறையை அணுகலாம் :

உதவி தேவைப்படும் முதியோர்  காவல் துறையை அணுகலாம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கின்போது மூத்த குடிமக்கள் நலன் காக்கும் வகையில் காவல் துறை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கில், தனியாக வாழும் மற்றும் ஆதரவற்ற மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில், அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, உதவி தேவைப்படும் முதியோர், இந்த உதவி மையத்தை 04329-222216 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலையங்களிலும் தலா 2 காவலர்கள் வீதம் சுழற்சி முறையில் 32 காவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என எஸ்.பி வீ.பாஸ்கரன் தெரிவித்துள் ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in