Published : 24 May 2021 03:12 AM
Last Updated : 24 May 2021 03:12 AM
கரோனா தடுப்பு பணிக்காக ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்கிக் கொள்வதற்காக வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளது.
கூட்டுறவுத் துறை மூலம் புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியில் உள்ள நகர கூட்டுறவு பண்ட கசாலையில் இருந்து வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை நேற்று தொடங்கி வைத்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, “புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தர மான காய்கறிகள் கிடைக்கச் செய்வதற்கு கூட்டுறவுத் துறை சார்பில் 60 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளது” என்றார்.
இதேபோல, ஆலங்குடியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து வாகனம் மூலம் காய்கறி விற்பனையை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். எம்எல்ஏ வை.முத்துராஜா, மாவட்ட வரு வாய் அலுவலர் பெ.வே.சரவணன், மண்டல கூட்டுறவு இணைப்பதி வாளர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT