செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சகாதேவன் மரணம் :

சகாதேவன்
சகாதேவன்
Updated on
1 min read

திண்டிவனம் அருகே நீர்பெருத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சகாதேவன் (87). 1971-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இத்தேர்தலில் திமுக இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்ததால் இந்திரா காந்தியும், அதைத் தொடர்ந்து அப்போது திமுகவில் இருந்த எம்ஜிஆரும் சகாதேவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது சகாதேவன் அதிமுகவில் இணைந்தார். அதன்பின், வல்லம் ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்தார்.

கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சகாதேவன், நேற்று பிற்பகல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு கல்வராயன், சுப்புராயன் என இரு மகன்கள் உள்ளனர். இறுதிச் சடங்கு சொந்த ஊரில் இன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in