Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
இதனால், திருவரங்குளம் அருகே உள்ள மாஞ்சான்விடுதி, மழவராயன்பட்டி உள்ளிட்ட கிரா மங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.இதனால், விவசாயிகள் வேதனைய டைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கீழா நிலை 60, பெருங்களூர் 59, புதுக் கோட்டை 26, மழையூர் 24, ஆதனக் கோட்டை 23, அறந்தாங்கி 17, கந்தர்வக்கோட்டை 16, பொன்ன மராவதி 13, அழியாநிலை 12, ஆலங்குடி, திருமயம் தலா 5, கறம்பக் குடி 4, உடையாளிப்பட்டி 3.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT