

திருநெல்வேலியில் கரகாட்டம் உட்பட கிராமியக் கலைஞர்கள் 42 பேருக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நகர கிளைத் தலைவர் இளங்கோமணி, துணைத் தலைவர் ஈஸ்வரன், தென்மண்டல அனைத்து கரகாட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.பொன்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.