

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்பு குழுக்கள் அமைத்து, வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பாளையங்கோட்டை அண்ணா நகரில் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட கரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என நேற்று ஆய்வு நடந்தது. காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் குறித்து பதிவு செய்யப்படுகிறது. கரோனா தொற்றுக்கான அறிகுறியுள்ளவர்கள், உடனடி யாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டனர்.