

பவானி அருகே கரோனா பாதிப்பால் கணவர் உயிரிழந்ததையடுத்து, மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி சம்தாவதி (58). ஆப்பக்கூடலில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வந்தனர். இவரது மகன் யுவராஜ் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.
கோவையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், 18-ம் தேதி சம்தாவதி ஆப்பக்கூடல் திரும்பினார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று உறுதியானது. இதனால், மனமுடைந்த சம்தாவதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மற்றொருவர் உயிரிழப்பு