

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் வெங்காய மண்டி இயங்கி வருகிறது. இங்கு 78 கடைகள் உள்ளன.
திருச்சி உட்பட 6 மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் வெங்காயம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, இங்குள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 10 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, கரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சில நாட்களுக்கு மார்க்கெட்டை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ் கூறியது:
திருச்சி பழைய பால்பண்ணை வெங்காய மண்டி மே 24-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை இயங்காது.
விவசாயிகள் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனைக்காக காத்திருப்பதை தவிர்ப்பதற்காக 3 நாட்கள் முன்னதாக அறிவித்துள்ளோம். இனி ஒரு வாரத்துக்கு இந்த வெங்காய மண்டிக்கு வெங்காயம் வரத்து இருக்காது. அதேவேளையில், திருச்சி மாவட்டத்தில் வெங்காய தட்டுப்பாடும் நேரிடாது என்றார்.