தமிழக முதல்வரின் - கரோனா நிவாரண நிதிக்கு : ரூ.5,127 வழங்கிய பள்ளி மாணவர்கள் :

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மாணவி சாதனேஷ்வரி, மாணவர் யஷ்வந்த் ஈஸ்வர் (அடுத்தபடம்)  மாணவர் ஹரிபிரசாத் ஆகியோர்  தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர்.
முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மாணவி சாதனேஷ்வரி, மாணவர் யஷ்வந்த் ஈஸ்வர் (அடுத்தபடம்) மாணவர் ஹரிபிரசாத் ஆகியோர் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினர்.
Updated on
1 min read

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக 5,127 ரூபாயை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் 3 மாணவர்கள் நேற்று வழங்கினர்.

தி.மலை அடுத்த கண்டியாங்குப்பம் கிராமத்தில் வசிப்ப வர்கள் ஆசைதம்பி மகள் சாத னேஷ்வரி(13), மகன் யஷ்வந்த் ஈஸ்வர்(11). அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள், இருவரும் கடந்த ஓராண்டாக உண்டியல்களில் தனித்தனியே சேமித்து வந்த ரூ.2,926 தொகையைமுதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று வழங்கினர்.

இதேபோல், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமத் தில் வசிப்பவர் மணிகண்டன் மகன் ஹரிபிரசாத்(10). தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், மிதிவண்டி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.2,201 தொகையை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in