இன்டர்நெட் சென்டர்கள் மூடப்பட்டிருப்பதால் - இ-பதிவு செய்ய முடியாமல் திண்டாடும் கிராமப்புற மக்கள் :

இன்டர்நெட் சென்டர்கள் மூடப்பட்டிருப்பதால் -  இ-பதிவு செய்ய முடியாமல் திண்டாடும் கிராமப்புற மக்கள் :
Updated on
1 min read

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு முறை அமலாகியுள்ளதால் பயணத்திற்காக பதிவு செய்ய இன்டர்நெட் சென்டர்கள் இல்லாததால் கிராமப்புறமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்கள் கண்டிப்பாக இ-பதிவு செய்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருந்து, எளிதாக கையாளும் நகர்புற வாசிகள் ஸ்மார்ட் போன் மூலமாகவே விண்ணப்பித்து பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். அதேநேரத்தில் ஊரகப் பகுதிகளில் ஸ்மார்ட் போன் கைவசம் இல்லாதவர்களும், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் சிலர் மொழிப் பிரச்சினையால் கையாள தெரியாததாலும், பயணம் மேற்கொள்ள சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், இன்டெர்நெட் சென்டர்கள் மூடப்பட்டிருப்பதால் இ-பதிவு செய்ய முடியாமல் திண்டாட்டத்திற்கு ஆளாவதோடு, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நபர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மானவர்கள்கல்வி கட்டணம் இ-வேலைவாய்ப்புக்கான இணையத்தில் பதிவு செய்ய இன்டர்நெட் சென்டர்இல்லாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே கிாரமப்புற மக்களின் அவசியம் கருதி இன்டர்நெட் சென்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in