திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய சிறுமி சண்முகவள்ளி.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய சிறுமி சண்முகவள்ளி.

முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய திண்டுக்கல் சிறுமி :

Published on

கரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவ முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரெட்டியார்சத்திரம் அருகே காளியம்மன் நகரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கண்ணன் மகள் சண்முகவள்ளி, முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப விரும்பினார். இதற்காக தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1,444-ஐ மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் வழங்கினார். சிறுமியை ஆட்சியர் பாராட்டினார்.

வி.சித்தூரைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் கோவர்த்தனேசன் ரூ. 30 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in