

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 91,065 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள் ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள் ளிட்ட 84 தடுப்பூசி மையங் களில் நாள்தோறும் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்றன. இதுவரை, மாவட்டத்தில் 91,065 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3,520 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகமுள்ள 134 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 59 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. என்.ஜி.ஒ. பி காலனி அமலா தொடக்கப் பள்ளி கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.