ஆலங்குளத்தில் திருமணத்தன்று மணமகன் மர்ம மரணம் :

ஆலங்குளத்தில் திருமணத்தன்று மணமகன் மர்ம மரணம் :
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த மோதிலால் என்பவரது மகன் இசக்கிராஜா (35). இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை 9.30 மணியளவில் பெண் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை தனது வீட்டில் நடைபெற்ற திருமண தாம்பூல கவர் போடும் பணியை இசக்கிராஜா கவனித்துள்ளார்.

நேற்று காலை 6 மணியளவில் வீட்டில் இசக்கிராஜாவை உறவினர்கள் தேடியுள்ளனர். வீட்டில் அவர் இல்லை என்பதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வழக்கமாக இசக்கிராஜா குளிக்கச் செல்லும் கிணற்றுக்கு தேடிச் சென்றனர். ஊருக்கு வெளியே வயல்வெளியில் அவரது செல்போன், செருப்பு ஆகியவை கிடந்துள்ளன. கடையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குளம் தீயணைப்புப் படையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது, கிணற்றின் ஆழத்தில் இசக்கிராஜாவின் சடலம் கிடைத்தது. இசச்கிராஜாவின் கால்கள் கட்டப்பட்டு இருந்தன. திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in