நெல்லைக்கு 14 டன் ஆக்சிஜன் வரத்து :

ரூர்கேலாவிலிருந்து 14 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
ரூர்கேலாவிலிருந்து 14 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
Updated on
1 min read

ஓடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 14 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டது.

இம்மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளி கள் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு இடங்களில் இருந்தும் ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஆக்சிஜன் பெறப்படுகிறது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ரயில்மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட ஆக்சிஜனில், 14 டன் இங்குள்ள கொள்கலன்களில் நிரப்பி வைக்கப்பட்டது. 1.5 டன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்துவரும் சில நாட்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்று, மருத்துவமனை வட்டாரங் கள் நம்பிக்கை தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in