ஈரோடு கிழக்குத் தொகுதியில் -  நடமாடும் மளிகை, காய்கறி கடைகள் அமைக்க வேண்டும் :  ஆட்சியரிடம் தமாகா இளைஞரணி கோரிக்கை

ஈரோடு கிழக்குத் தொகுதியில் - நடமாடும் மளிகை, காய்கறி கடைகள் அமைக்க வேண்டும் : ஆட்சியரிடம் தமாகா இளைஞரணி கோரிக்கை

Published on

ஈரோடு கிழக்குத் தொகுதியில்நடமாடும் காய்கறி மற்றும் மளிகைக்கடைகளை ஏற்படுத்த வேண்டு மென மாவட்ட ஆட்சி யருக்கு தமாகா இளைஞரணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியரிடம் தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதியை பொறுத்தவரையில் லட்சக்கணக்கான மக்கள் வாழக்கூடிய பகுதியாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில் மளிகைமற்றும் காய்கறிக் கடைகள் செயல்பட்டாலும் கூட, கரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், மக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்க அச்சப்படுகிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையிலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 36 வார்டுகளுக்கும், கைவண்டி மற்றும் சிறு வண்டிகள்மூலமாக மளிகை மற்றும் காய்கறிகளை கொண்டு சென்றுவிற்பனை செய்ய வேண்டும். இப்பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கென ஆகும் செலவில் ஒரு பங்கினை, ஊரடங்கு முடியும்வரை தமாகா இளைஞரணி ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in