

ஆலங்குடி காய்கறி மார்க் கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்கடை வீதியில் 20 காய்கறிக் கடைகள், மளிகை, இலைக்கடை என அடுத்தடுத்து குறுகிய தொலைவில் மொத்தம் 40 கடைகள் அமைந்துள்ளன. அரசு அனுமதி அளித்துள்ள குறுகிய நேரத்தில் இங்கு அதிகமானோர் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, இங்குள்ள தினசரி காய்கறி மார்க் கெட்டுகளை உழவர் சந்தைக்கோ, வாரச்சந்தைப் பகுதிக்கோ, பேருந்து நிலையத்துக்கோ மாற்ற வேண்டும் என ஆலங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.