நெல்லையில் காய்கறி கடைகளில் காலையில் திரளும் கூட்டம் :

பாளையங்கோட்டையில் பழைய காவலர் குடியிருப்பு வளாக மைதானத்தில் செயல்படும் தற்காலிக சந்தையில் சமூகஇடைவெளியின்றி பலர் திரண்டதால் கரோனா அச்சம் நிலவியது. 		            படம்: மு.லெட்சுமி அருண்.
பாளையங்கோட்டையில் பழைய காவலர் குடியிருப்பு வளாக மைதானத்தில் செயல்படும் தற்காலிக சந்தையில் சமூகஇடைவெளியின்றி பலர் திரண்டதால் கரோனா அச்சம் நிலவியது. படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைவிட 2-வது அலையில் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10-ம் தேதிமுதல் நிபந்தனைகளுடன் கூடியஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது, அதிகாலை 4 மணி முதல்பகல் 12 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 15-ம் தேதி புதியநிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். வாகனப்போக்குவரத்து இல்லாமல் சாலைகளும் வெறிச்சோடியிருந்தன.

நேற்று காலை 6 மணி முதல்10 மணி வரை காய்கறி, பலசரக்குகடைகள் திறந்திருந்தன. காய்கறிகள் மற்றும் பலசரக்குகள் வாங்க கடைகளில் மக்கள் திரண்டனர். தற்காலிக சந்தைகளிலும் கூட்டம்அதிகமிருந்தது.

பாளையங்கோட்டையில் பழைய காவலர் குடியிருப்பு வளாக மைதானத்தில் செயல் படும் தற்காலிக சந்தையில் சமூகஇடைவெளியின்றி பலர் திரண்டதால் கரோனா அச்சம் நிலவியது. இப்பகுதியிலுள்ள சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in