வீட்டில் பதுக்கிய  282 மதுபான பாட்டில் பறிமுதல் :

வீட்டில் பதுக்கிய 282 மதுபான பாட்டில் பறிமுதல் :

Published on

நாமக்கல் முத்துகாப்பட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 282 மதுபான பாட்டில்களை நாமக்கல் மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அருகே முத்துகாப் பட்டியில் கள்ளமார்க்கெட்டில் மதுபானம் விற்பனை செய்யப் படுவதாக ஊராட்சித் தலைவர் அருள்ராஜேஸ் மாவட்ட ஆட்சி யருக்கு புகார் மனு அனுப்பினார். இதையடுத்து நாமக்கல் மதுவிலக்கு காவல் துறையினர் முத்துகாப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெருமாபாளையத் தில் உள்ள ஒரு வீட்டில் 282 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து மதுபான பாட்டில்களை பதுக்கிய நபரை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in