

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1232 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 642 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ள னர். மாவட்ட அளவில் தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 6088 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
சேலத்தில் 822 பேர்
இதில், சேலம் மாநகரப் பகுதிகளில் 383 பேரும், நகராட்சிகளில் ஆத்தூரில் 25, மேட்டூரில் 6, நரசிங்கபுரத்தில் 1, வட்டார அளவில் சேலத்தில் 47, வாழப்பாடி, வீரபாண்டியில் தலா 35, ஆத்தூரில் 34, ஓமலூரில் 27, சங்ககிரியில் 32, பனமரத்துப்பட்டியில் 25, மகுடஞ்சாவடியில் 24, கொங்கணாபுரத்தில் 23, அயோத்தியாப் பட்டணத்தில் 20, பெத்தநாயக்கன் பாளையத்தில் 15, தலைவாசலில் 14, எடப்பாடியில் 17, தாரமங்கலத் தில் 16, காடையாம்பட்டி, நங்கவள்ளியில் தலா 12 என மாவட்டம் முழுவதும் 822 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தின நிலவரப்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 101 ஆகஉயர்ந்தது. இந்த பகுதிகளில் உள்ள 1,540 வீடுகள் சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அங்கு வசிக்கும் 6 ஆயிரத்து120 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.