

புதுக்கோட்டையில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்வதற்காக மே 19-ம் தேதி புதுக்கோட்டையில் நேர்காணல் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகமே தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மே 19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது. மருத்துவர்களுக்கு காலை 10 மணிக்கும், செவிலியர்களுக்கு பகல் 2 மணிக்கும் நேர்காணல் நடைபெறும். மருத்துவர்களுக்கு ரூ.60,000 மற்றும் செவிலியர்களுக்கு ரூ.14,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.