திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் - கரோனா நிவாரணம் முதல் தவணை வழங்கும் பணி : அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி காஜாதோப்பு ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி முதல் தவணைத் தொகையை நேற்று வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. (அடுத்த படம்) புதுக்கோட்டை கலீப் நகர் ரேஷன் கடையில் கரோனா முதல் கட்ட நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்.
திருச்சி காஜாதோப்பு ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி முதல் தவணைத் தொகையை நேற்று வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. (அடுத்த படம்) புதுக்கோட்டை கலீப் நகர் ரேஷன் கடையில் கரோனா முதல் கட்ட நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன்.
Updated on
2 min read

அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரசின் கரோனா நிவாரண நிதி முதல் தவணைத் தொகை வழங்கும் பணியை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காஜாதோப்பு, ரங்கம் தொகுதி நெல்சன் ரோடு, லால்குடி தொகுதி தாளக்குடி 2, மண்ணச்சநல்லூர் தொகுதி நொச்சியம், துறையூர் தொகுதி கண்ணனூர், முசிறி தொகுதி மக்கள் அங்காடி 1 ஆகிய இடங்களில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணைத் தொகையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக் கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாக ராஜன், எம்.பழனியாண்டி, எஸ்.கதிரவன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் க.அருளரசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்ம ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் க.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி திருவெறும்பூர் காவேரி நகர், காட்டூர் பர்மா காலனி, அரியமங்கலம் உக்கடை, திருச்சி வரகனேரி, மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி ஆகிய ரேஷன் கடைகளில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு அரசின் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் கோடங்கிப் பட்டியில் கரோனா முதற்கட்ட நிவாரண நிதி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச் சர் வி.செந்தில்பாலாஜி கரோனா முதற்கட்ட நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கரூர் எம்.பி. செ.ஜோதிமணி முன்னிலை வகித் தார். கூட்டுறவு இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். கரூர் மாவட்டத்தில் உள்ள 3,11,511 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட கரோனா நிவாரண நிதி வழங்க ரூ.62.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கலீப் நகர் ரேஷன் கடையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நிவாரணத் தொகையின் முதல் தவணை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

இதில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.46 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.89.26 கோடி வழங்கப்பட இருப்ப தாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நக்கசேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகொண்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகையை வழங்கினார். இதில், பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் பொய்யா தநல்லூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன்கார் டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா நேற்று வழங்கினார். மாவட்டத்தில் உள்ள 2,32,646 ரேஷன்கார்டுகளுக்கு முதல் தவணையாக ரூ.46.53 கோடி வழங்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in