

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித் துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட் டத்தில் அனைத்து மருத்துவ மனைகளிலும், கரோனா சிகிச்சை சிறப்பு மையங்களிலும் நோயா ளிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன. தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக பெறப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கூடங் குளம் அரசு மருத்துவமனை மற்றும் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப் படும் நிலை உருவாகியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.