Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10.26 லட்சம் குடும்பங்களுக்கு - ரூ.212.52 கோடி கரோனா நிவாரண உதவித்தொகை : அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகியோர் வழங்கினர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 266 குடும்ப அட்டைதாரர்களுக்கான முதற் கட்ட கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ.212 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் தொகை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். இதன் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொடங்கியது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார் பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 614 நியாய விலை கடைகளில் இலங்கை அகதிகள் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.84 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 நியாயவிலை கடைகள் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 207 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.65 கோடியே 64 லட்சத்து 14 ஆயிரமும், திருப்பத்தூர் மாவட் டத்தில் 509 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 10 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.62 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரமும் நிவாரண உதவித்தொகை வழங்கப் படவுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,821 நியாயவிலை கடைகள் மூலம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 266 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.212 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் தொகை வழங்கப்படவுள்ளன.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிவாரண தொகையை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப் பினர் கார்த்திகேயன் (வேலூர்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை சந்தை மேடு நியாய விலை கடையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் நிவாரணத் தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

ஜோலார்பேட்டை பாச்சல் கிராம நியாயவிலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் நிவாரண தொகையை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x