

சேலம் மாவட்டத்தில் நடப் பாண்டில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 763 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், முழு ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர், தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 664 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று நடப்பாண்டில் முதல்முறையாக 763 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதில், சேலம் மாநகரப் பகுதியில் 407 பேரும், நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூரில் 15, மேட்டூரில் 12, வட்டார அளவில் வீரபாண்டியில் 43, எடப்பாடியில் 38, பனமரத்துப்பட்டி, சேலத் தில் தலா 35, ஓமலூரில் 34, சங்ககிரியில் 22, தாரமங்கலத்தில் 18, வாழப்பாடி, மகுடஞ்சாவடியில் தலா 15, அயோத்தியாப்பட்டணத்தில் 13, மேச்சேரியில் 12, கொங்கணாபுரத்தில் 11, ஆத்தூர், நங்கவள்ளியில் தலா 7, கொளத்தூர், கெங்கவல்லியில் தலா 6, ஏற்காடு, தலைவாசலில் தலா 4, காடையாம்பட்டியில் 3, பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 என மாவட்டம் முழுவதும் 763 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் 910 பேர்