கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் - காலிப் படுக்கை விவரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும் : திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் -  காலிப் படுக்கை விவரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும் :  திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா தொற்றாளர்களுக்கான காலிப் படுக்கை விவரங்களை தினந்தோறும் இருமுறை இணை யதளத்தில் வெளியிட வேண்டும் என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி அறிவுறுத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.திவ் யதர்ஷினி தலைமை வகித்துப் பேசியது: திருச்சி மாவட்டத்தில் அரசு வழிகாட்டுதலின்படி அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்றாளர்களின் ரத்த ஆக்சிஜன் அளவின் அடிப்படை யில் கரோனா சிறப்பு மையங் களிலும், வீட்டுக் கண்காணிப்பு முறையிலும் சிகிச்சை வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கை வசதிகளின் எண்ணிக்கை, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை விவரம் மற்றும் காலிப் படுக்கை வசதிகள் எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை தினசரி 2 முறை https://tncovidbeds.tnega.org என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், இணை இயக்குநர் (குடும்ப நலம்) லட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம் கணேஷ், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in