Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் மலைப் பாதையில் இருந்த சிற்பங்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
விராலிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதிதாக ரூ.4 கோடியில் அண்மையில் மலைப் பாதை அமைக்கப்பட்டது. இதன் ஓரத்தில் பல்வேறு இடங்களில் சிமென்ட் கலவையால் செய்யப்பட்ட சுவாமி, அம்மன், சிங்கம், மயில் போன்ற சிற்பங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது முழு ஊரடங்கைத் தொடர்ந்து கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அங்கு மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. இந்த சூழலில், மலைப் பாதையில் இருந்த சிற்பங்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியது நேற்று முன்தினம் தெரியவந்தது.
இதையறிந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜகிரி சுப்பையா, சிற்பங்களை சேதப்படுத்திய நபர் களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விராலிமலை காவல் நிலையத்தில் நேற்று மனு அளித்துள்ளார்.
இதனிடையே, ‘‘விராலிமலை கோயில் மலைப்பாதையில் உள்ள சிற்பங்கள் உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து மனம் உடைந்து, நொறுங்கி போனேன். இத்தகைய செயல் கடும் கண்ட னத்துக்கு உரியது. சம்பந்தப்பட் டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அத்தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச் சருமான சி.விஜயபாஸ்கர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT