கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண் :

கொலை வழக்கில் தொடர்புடைய   4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண் :
Updated on
1 min read

மறைமலைநகர் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (28) இவர் மறைமலை நகரிலுள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இவரை மொபைலில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்றி, பொருட்களை எடுத்துச் செல்ல வேலை இருப்பதாக அழைத்துள்ளார். இதையடுத்து தனது பைக்கில் புறப்பட்டுச் சென்ற வீராவை, பொத்தேரி அருகே, 6 அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்றனர். இது குறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் தாயுமானவன் முன்னிலையில் மறைமலைநகர், பாவேந்தர் சாலையில் வசிக்கும் பஞ்சாட்சரம் மகன் சுகுமார் (33), புதுச்சேரி, சஞ்சீவி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் மணிகண்டன் (36), கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் தினகரன் (24), புதுச்சேரி புரணாவ்குப்பம் செல்வநாதன் மகன் செல்வமணி (20) ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர். இவர்களை குற்றவியல் நீதித்துறை நடுவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in