

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில்கொலை வழக்குகளில் தொடர்புடைய சீவலப்பேரி மாடசாமிமகன் பேச்சுக்குட்டி (22), சீவலப்பேரி புதுக்காலனி தெருவைச்சேர்ந்த முண்டசாமி மகன் தங்கபாண்டி (23), நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகன் முருகன் (21) ஆகியோரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்பி நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.