தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் : விழுப்புரம் காவல்துறை எச்சரிக்கை

தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் :  விழுப்புரம்  காவல்துறை எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு காவல்துறை, சுகாதாரம், வருவாய்த் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் நேற்று இயங்கவில்லை. தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அரசு விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் இயங்கின.

ஆனால் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் வழக்கம் போல பயணித்தனர். சில நான்கு சக்கர வாகனங்களும் இயங்கின. இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "முதல் நாள் என்பதால் எச்சரித்து அனுப்பியுள்ளோம். இன்றும் வழக்கமான நிலை தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும். எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in