கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க - டோக்கன் விநியோகம் தொடக்கம் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரேஷன் கடை  பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர் களின் வீடுகளுக்குச் சென்று கரோனா நிவாரண உதவித் தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்வதை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர் களின் வீடுகளுக்குச் சென்று கரோனா நிவாரண உதவித் தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்வதை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மாணிக்கம்பாளையம் பகுதியில் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடு களுக்குச் சென்று கரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்தனர். இப்பணியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகையாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள் ளார். இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7.13 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் நாளை வரை (12-ம் தேதி) நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதோறும் சென்று ரேஷன் கடைப் பணி யாளர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்படும்.

இதையடுத்து 15-ம் தேதி முதல் தலா ரூ.2 ஆயிரத்தை டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம்அணிந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in