

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள வடக்கு பரணம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் விஜய்(26). கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாகவும், தொடர்ந்து அந்த சிறு மிக்கு செல்போனில் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் மகளிர் போலீ ஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் விஜயை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.