Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
விழுப்புரத்தில் இருந்து பல்வேறு தடங்களில் இன்று முதல் அரசு ஊழியர்களாக மட்டும் பேருந்து இயக்கப்படுகிறது.
கரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருவதால் இன்று முதல் 24-ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரத் துறை ஊழியர்கள், வருவாய்,நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் தினமும் காலை , மாலை என இருவேளை பேருந்துகள் இயக்கப்படும். இதில் பயணிக்கும் ஊழியர்கள் நடத்துநரிடம் தங்களின் அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம்.
தினமும் காலை காலை 8.30 மணிக்கு வடலூர், கடலூர், புதுச்சேரி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, திண்டிவனத்திலிருந்து விழுப்புரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும். இதே போல் தினமும் மாலை 6 மணிக்கு விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வழியாக வடலூர், கடலூர், வளவனூர் வழியாக புதுச்சேரி, திருக்கோவிலூர், செஞ்சி வழியாக திருவண்ணாமலை, விக்கிரவாண்டி வழியாக திண்டிவனம் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT