

எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏஆர்டி கூட்டு சிகிச்சை(எச்ஐவி/எய்ட்ஸ்) மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு, இன்று (10-ம் தேதி) முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஊரடங்கு காலங்களில் எளிதில் ஏஆர்டி கூட்டு சிகிச்சை (எச்.ஐ.வி/எய்ட்ஸ்) மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இன்று (10-ம் தேதி) முதல் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில்36 ஐசி டிசி மையங்களுக்கும் (நம்பிக்கை மையங்கள்) ஏஆர்டி மருந்துகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
எனவே, மருந்து எடுப்பவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள ஐசிடிசி மையங்களுக்கு சென்று, மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ளலாம் மேலும் விவரங்கள் அறிய மாவட்ட மேற்பார்வையாளரின் 98430 88938 செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.