Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

ஈரோடு கனி மார்க்கெட் கடைகள் திறக்க அனுமதிக்க சங்க தலைவர் கோரிக்கை :

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து மக்கள் காய்கறி வாங்குகின்றனரா என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளிக் கடைகள் திறக்க தளர்வுகள் அளித்து அனுமதிக்க வேண்டும், என கனிமார்க்கெட் வாரச்சந்தை தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு கனி மார்க்கெட் வாரச் சந்தை தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

கரோனா தாக்கம் காரணமாக ஜவுளித் தொழில் ஏற்கெனவே நலிவடைந்து வருகிறது. தற்போது இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில வியாபாரிகள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வருவதில் சிரமம் நிலவுகிறது. இதன் மூலம் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வியாபாரம் மட்டும் குறைந்த அளவு நடந்து வந்தது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 20-ம் தேதி வரை தினசரி கடையை மூட முடிவு செய்து அதன்படி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாளைக்கு ரூ.80 லட்சம் வீதம் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அரசு சில தளர்வுகள் அறிவித்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளித்தால் ஓரளவு தொழிலை நடத்தி வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x