Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
செம்மொழி தமிழ்ப் புலமையை மேம்படுத்துவதற்காக முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகைதகுதியுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், வரலாறு போன்ற ஏதாவது ஒரு துறையில் கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்கள் குறித்த தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றோர் இந்த உதவித் தொகை பெற ஜூன் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் தாங்கள் மேற்கொள்ளவுள்ள ஆய்வு குறித்து மேற்கண்டவற்றில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒருதுறை சார்ந்த பாடத்தில் 25 பக்கஆய்வறிக்கையை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை https://cict.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை, ‘இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை -600 113' என்ற முகவரிக்கு ஜூன் 18.ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT