

மதுரை அரசு மருத்துவக் கல் லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.
ஒரு நபருக்கு 6 மருந்துகள் வழங்கப்படும். ஒரு மருந்தின் விலை ரூ.1,568. மொத்தம் ரூ.9,408 கட்டணம் செலுத்த வேண்டும்.
மருந்து வாங்க வருவோர் ஆர்டிபிசிஆர் அறிக்கை, இதய சிடி ஸ்கேன் அறிக்கை (அசல்), மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் முத்திரையுடன் (அசல்), தொற் றாளரின் ஆதார் அட்டை (நகல்), மருந்து வாங்க வருபவரின் ஆதார் அட்டை (நகல்) ஆகிய சான்றுகள் எடுத்து வர வேண்டும்.
நேற்று முதல் நாள் இந்த மருந்து வாங்கக் கூட்டமில்லை. ஏனெனில், இந்த மருந்து விற்பனை குறித்த தகவல் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தெரியவில்லை. கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது