கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு : ஒரே நாளில் 1, 217 பேருக்கு தொற்று

கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு :  ஒரே நாளில் 1, 217 பேருக்கு தொற்று
Updated on
1 min read

மதுரையில் கரோனாவால் பாதி க்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 1,217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவும்(31) கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 3 நாட் களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in